சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் தேரோட்டம்
ADDED :5200 days ago
சாத்தூர் : சாத்தூர் வெங்கடாசலபதி கோயில் ஆனி திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் சுவாமி வாகனங்களில் பவனி வருதல் உள்ளிட்ட பல் வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆனையர் கஜேந்திரன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன்,தக்கார் பூவலிங்கம்,ஆய்வாளர் முத்துராமலிங்கம், நிர்வாக அலுவலர் சுவர்ணாம்பாள் உட்பட சுற்று கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் டி.எஸ்.பி., சின்னையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.