உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா!

மதுரை திருப்பரங்குன்றத்தில் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா!

மதுரை: திருப்பரங்குன்றம் பெரியரத வீதி, சரவண பொய்கை போகும் பாதை எதிர்புறம், விஷ்வகர்மா தெக்ஷன வகுப்பு திருமண மகாலில் 9.8.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் புதிதாக ஐம்பொன்னில் உருவாகியுள்ள மச்சமுனி சித்தர் ஐம்பொன் விக்கிரஹத்திற்கு சிறப்பு ஹோமம், சிறப்பு அபிஷேகம், பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.10.8.2015 முதல் தினசரி காலை: 7.00 மணிக்கு மிளகுகஞ்சி சாதுக்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.நிகழ்ச்சி நிரல்:8.8.2015 - சனிக்கிழமைமாலை: 4.00 மணிக்கு சூரிய ஹோரையில் 7000 (ஏழாயிரம்) ஓம் நமச்சிவாய மந்திரம் ஜெபம்- பாராயணம்இரவு: 8.00 மணிக்கு இரவு உணவு மற்றும் தங்கும் இடவசதி மண்டபத்தில் <உண்டு.9.8.2015 - ஞாயிற்றுக்கிழமைகாலை: 4.00 மணிக்கு பிரம்மமுகூர்த்தம் குரு ஹோரையில் சங்கு நாதம் முழங்க முதல் கால சிறப்பு கணபதி ஹோமம் மற்றும் ஆராதனைகாலை: 6.00 மணிக்கு சூரியஹோரையில் சாதுக்களுடன் மலைக்கு சென்று காசி விஸ்வநாதர் கோவிலில் ஸ்ரீமச்சமுனி சித்தருக்கு தயிர் நைவேத்தியம் செய்து சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பூஜைக்கு பின் திருமண மண்டபம் திரும்புதல்.காலை: 8.00 மணிக்கு காலை உணவு மண்டபத்தில் வழங்கப்படும்.காலை: 9.00 மணிக்கு பிரியகலாலயா வழங்கும் சிவநடனம் பரதநாட்டிய நிகழ்ச்சி.காலை: 10.00 மணிக்கு பதியென் சித்தர்கள் சிறப்பு சொற்பொழிவு சீர்காழி தவயோகி ஐயா பாட்டுச் சித்தர் நாராயணசாமி அவர்கள்காலை: 11.00 மணிக்கு குருஹோரையில் ஸ்ரீமச்சமுனி சித்தர் ஐம்பொன் விக்ரகத்திற்கு சிறப்பு ஹோமம்- சிறப்பு அபிஷேகம்- சிறப்பு பூஜை, அதை தொடர்ந்து சாதுக்கள் காசி முனிவர்கள்- அனைத்து- சித்தர்களிடம் நல்லாசி பெறுதல்.பகல்: 12.30 மணிக்கு மாபெரும் அன்னதானம்- இரவு வரைமாதந்தோறும் குருநாதர் மச்சமுனியின் நட்சத்திரம் ரோகினி நாளில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறும். பவுர்ணமி கிரிவலத்தின் போது மாலை 3.00 மணிக்கு பானகம் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் 5.00 மணிக்கு குங்கிலிய சாம்பிராணி, சங்கு நாத முழங்க அடியார்களோடு கிரிவலம் நடைபெறுகிறது.தொடர்புக்கு: 98429 04005, 93442 82107, 99944 39678


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !