மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3685 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3685 days ago
https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46043_113826484.jpgராமேஸ்வரம், கோயிலில் ஆடித்திருக்கல்யாண, விழா கொடியேற்றத்துடன் துவக்கம்,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_46043_113834564.jpgராமேஸ்வரம், கோயிலில் ஆடித்திருக்கல்யாண, விழா கொடியேற்றத்துடன் துவக்கம்ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா 7.8.15 கொடியேற்றத்துடன் துவங்கியது.இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது மகா சிவராத்திரி விழாவும், ஆடி திருக்கல்யாண விழாவும் தான். இந்தாண்டிற்கான ஆடி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 9.50 மணிக்கு பர்வத வர்த்தினி அம்மன் சன்னதி முன் உள்ள கொடி கம்பத்தில் கோயில் குருக்கள் வேத மந்திரம் முழங்க கொடி ஏற்றப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட பர்வத வர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஆடி அமாவாசை தினமான ஆக. 14ல், ஸ்ரீ ராமர் தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தம் வாரி கொடுத்தாலும், ஆக., 15 ல் தேரோட்டமும், ஆக.,18ல் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறும்.கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, நகராட்சி தலைவர் அர்ச்சுனன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.
3685 days ago
3685 days ago