உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை திருத்தணியில் இன்று ஆடி கிருத்திகை!

சென்னை திருத்தணியில் இன்று ஆடி கிருத்திகை!

சென்னை:திருத்தணி ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி, மக்கள் அதிகம் கூடுவதால், ஒன்பது ஆம்புலன்ஸ் வாகனங்கள், மூன்று நடமாடும் மருத்துவக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும், அதிகளவிலான பக்தர்கள் பங்கேற்பர். அதனால், 108 சேவை மையம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: திருத்தணியில் இன்றும், நாளையும் ஏராளமான மக்கள் கூடுவர். விரதமிருந்து காவடி, பால்குடம் எடுத்து வருவர். இவர்களுக்கு, எதிர்பாராத மயக்கம், உடலில் சர்க்கரை அளவு மாற்றத்தாலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, ஒன்பது ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் உள்ளன. மலையில், ஆம்புலன்ஸ் செல்ல முடியாது என்பதால், மூன்று நடமாடும் மருத்துவக்
குழுக்களும் பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !