உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கில்துறைப்பட்டில் அம்மனுக்கு பூங்கரக விழா!

மூங்கில்துறைப்பட்டில் அம்மனுக்கு பூங்கரக விழா!

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகரில் உள்ள கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது.

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் தென்பெண்ணையாற்றாகரையில் அமைந்துள்ள கங்கையம்மனுக்கு நேற்று ஆடி வெள்ளி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் பகல் 1:00 மணிக்கு அருகில் உள்ள தென்பெண்ணையாற்றில் சக்தி கரகம் அழைத்து வந்தனர். மதியம் 2:00 மணிக்கு ஊர் மக்கள் முக்கிய வீதிகள் வழியாக கஞ்சிகளையம் மற்றும் சாகை குடங்களை ஏந்தி சென்றனர். தொடர்ந்து கங்கையம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது. பக்தர்கள் திர ளாக கலந்துக் கொண்டு கங்கையம்மனை வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !