தேவகோட்டை உழவாரப்பணி!
ADDED :3748 days ago
தேவகோட்டை : தேவகோட்டைஅருகே தாழையூர் கூத்தாடி முத்துபெரியநாயகிஅம்மன் கோயிலில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கோயில் வளாகத்தில் உழவாரப் பணி செய்தனர்.
முதல்வர் சந்திரமோகன் தலைமை வகித்தார். திட்ட அலுவலர்கள் அருள்சாமி, மாணிக்கம், வீரலட்சுமி தலைமையில் மாணவர்கள் பணிகளை செய்தனர். இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டியன் பாராட்டினார். லயன்ஸ் தலைவர் ரங்கசாமி, தலைமையாசிரியர்கள் சீனிவாசன், ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.