உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மாப்பேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

அம்மாப்பேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலம்!

சேலம்: சேலம், அம்மாப்பேட்டையில் வண்டி வேடிக்கை கோலாகலமாக நடந்தது.சேலம்,
அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு நேற்று, பராசக்தி
வண்டி வேடிக்கை விழா குழு சார்பாக, 35ம் ஆண்டு விழா நடந்தது.

திருமாள், அஷ்டலட்சுமி அவதாரம், அவ்வையார், முருகன், வள்ளி, தெய்வானை, வீரபாபு உடன் அமர்ந்த காட்சி, சமயபுரத்து மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன், கருமாரி மாரியம்மன், சேலம் கோட்டை மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் ஆகிய ஐந்து மாரியம்மன்களின் மின்காட்சி, ரங்கநாராயணன் பள்ளி கொண்ட காட்சி, பிரம்மா, நாரதர் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட காட்சி, விநாயகர், முருகன், அர்த்தனாரீஸ்வர், அகத்தியர், நந்நீஸ்வரர் அலங்காரம் ஆகிவை சிறப்பாக வடிமைக்கப்பட்டு இருந்தது.

இதற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.இரண்டாம் பரசி விஸ்வ கர்மா இளைஞர் குழு சார்பில், ராமர், சீதை அனுமன், கிருஷ்ணன், விபீஷனன், ஜாம்பவான், லட்சுமணன், லவகுசா, அலங்கார வண்டி ஆகியவற்றுக்கு கிடைத்தது. மொத்தம் 11 வண்டிகள் கலந்து கொண்டது.விழாவுக்கான ஏற்பாட்டை, வண்டி வேடிக்கை விழாக் குழு தலைவர் ஆறுமுகம், துணை தலைவர் செந்தில்நாதன், செயலாளர் சிவசண்முகம், பொருளாளர் கந்தவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !