உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரிமங்கலம் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு!

காரிமங்கலம் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு!

காரிமங்கலம்: காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள, முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை சிறப்பு வழிபாடு இன்று (8ம் தேதி) நடக்கிறது.காரிமங்கலம் அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், முரசுபட்டி முருகன் கோவில், சென்னம்பட்டி முருகன் கோவில் ஆகியவற்றில் ஆடி
கிருத்திகையொட்டி ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் நகர் சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில், பாப்பாரப்பட்டி சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அரூர் கைலாயபுரம் முருகன் கோவில், ஒடசல்பட்டி, கௌாப்பாறை முருகன் கோவில், பொம்மிடி முருகன் கோவில், உட்பட பல கோவில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. மாலையில் ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !