வத்தலக்குண்டு வருடாபிஷேகம்!
ADDED :3749 days ago
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் ராகவேந்திரா கோயில் பிருந்தாவனத்தில்
வருடாபிஷேகம் நடந்தது. நான்காம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நிர்மால்ய பூஜை, மூல ராமர், பிருந்தாவனத்திற்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு யாகம் நடந்தது. தாமோதரன், சுதர்சன
ஆச்சார்யார்கள் யாகத்தை நடத்தினர். அன்னதானம் நடந்தது. அர்ச்சகர் கோபிநாதன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.