லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
ADDED :3748 days ago
லண்டன்: லண்டன் ஸ்ரீமுருகன் கோவிலில், நேற்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் ஒரு பகுதியாக கடந்த மாதம் 31ம் தேதியன்று, விநாயகர் பூஜை நடந்தது. இதன் பின்னர், கடந்த 1ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று, (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் (லண்டன் நேரப்படி) தேரோட்டம் மிகச்சிறப்பாக நடந்தது. இன்று (10ம் தேதி) தேர்த்திருவிழாவிற்காக ஏற்றப்பட்ட கொடி இறக்கப்படவுள்ளது. இந்த விழா வரும் 14ம் தேதி பைரவர் பூஜையுடன் நிறைவடையவுள்ளது.