வெண்ணெய்வேலவர் கோவிலில் வழிபாடு
ADDED :3749 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் வெண்ணெய்வேலவர் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு பால் காவடி ஊர்வலமும், மதியம் 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப் பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு முருகன், வள்ளி, தெய்வானைக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், இரவு 8:30 மணிக்கு வீதியுலாவும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.