அசனாம்பிகை அம்மன் கோவில் கொடியேற்றம்!
ADDED :3751 days ago
திட்டக்குடி: திட்டக்குடி அசனாம்பிகை அம்மன் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி கொடியேற்று விழா நடந்தது. திட்டக்குடி அசனாம் பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஐனவரி 26ம் தேதி நடந்தது. இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளாக கொண்டாடப்படாமல் இருந்த ஆடிப்பூர திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கடந்த 7ம் தேதி காலை 10:15 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தண்டபாணி மற்றும் திருஞானசம்பந்த குருக்கள் கொடியேற்றி விழாவை நடத்தி வைத்தனர். திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.