உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை!

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஆடி மாத 4ம் வெள்ளியை முன்னிட்டு  அன்று மதியம் 2:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 5:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில்  உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 6:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராமளான பெண்கள் பங்கேற்றனர். பூஜையை  ஐயர் சந்திரசேகர், சைவ சித்தாந்த ரத்தினம் ராஜன், நந்தகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !