உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி

திருக்காமீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணி

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் தெற்கு கோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணிக்கு சாரம் அமைத்து வருகின்றனர்.வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் 11ம் நூற்றாண்டில் தர்மபால சோழரால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புடையது. புதுச்சேரி அரசு ரூ. 11.55 கோடி செலவில் இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்து, கடந்த 2012 ம் ஆண்டு டிசம்பரில் பாலாலயம் நடத்தப்பட்டது.கோவில் முன் மண்டபம் ரூ. 29.50 லட்சம் செலவில் புதியதாக அமைத்து, வர்ணம் பூசும் பணி துவங்கியுள்ளது. கோவில் உள்பிரகாரத்தில் ரூ.55 லட்சம் செலவில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி அளவிற்கு கருங்கல் தரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தெற்கு பகுதியில் உள்ள 99 அடி உயரம் கொண்ட ஏழு நிலை ராஜகோபுரம் ரூ.48 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படுகிறது. கோபுரத்தின் அடிபாகத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க கான்கிரீட் பெல்ட் அமைத்து, புதிய தளம் அமைக்க உள்ளனர். கோபுரத்தில் பழுதடைந்த சிலைகள் சரி செய்து வர்ணம் பூசும் பணிக்கு கோபுரத்தில் சாரம் அமைக்கப்படுகிறது.திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் நடத்த உத்தேசித்துள்ளதால் திருப்பணி இரவு பகலாக நடந்து வருகிறது. திருப்பணிக்கு நன்கொடை கொடுப்பவர்கள் கோவில் சிறப்பு அதிகாரி அல்லது திருப்பணி கமிட்டியினரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !