பவரிலால் பேட்டையில் ஆடித்திருவிழா
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை, பவரிலால் பேட்டையில் மாரியம்மன் கோவில், 81வது ஆடித்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.நேற்று அதிகாலையில், அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு, 501 பெண்கள் பால் குடங்களை சுமந்து, ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டன.கர்நாடகா மாநில மகளிர் காங்., துணைத் தலைவி ரூபா சசிதர் தலைமையேற்று, பால்குடத்தை சுமந்து வந்தார். நகரசபை உறுப்பினர்கள் இந்திராணி, ரமேஷ் ஜெயின், சமூக நல ஊழியர் முத்தராமன் உட்பட பலர் உடனிருந்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று, நகரசபை தலைவர் பக்தவத்சலம், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை யில், அம்மனுக்கு சிறப்பு பூஜையும், கூழ் வார்த்தல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, தீச்சட்டிகள், நவதானிய முளைப்பாரிகள், காவடி ஊர்வலம் நடக்கிறது. இரவு, புஷ்ப பல்லக்கு மாட வீதி வழியாக பவனி வரும்.