பெரியபுராண தொடர் சொற்பொழிவு நிறைவு
ADDED :3711 days ago
சென்னை,: தி.நகரில், ஆர்.பி.வி.எஸ்.மணியனின், பெரியபுராண தொடர் சொற்பொழிவின் நிறைவு பகுதி நேற்று நடந்தது.சென்னை, தி.நகர், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள, ஸ்ரீஅலமேலு மங்கா கல்யாண மண்டபத்தில், ஆர்.பி.வி.எஸ்.மணியனின், பெரியபுராணம் குறித்த தொடர் சொற்பொழிவு, கடந்த, முதல் தேதி முதல் நேற்று வரை நடந்தது. நேற்று நடந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: நாயன்மார்களின் வரலாறு சொல்லும் காப்பியம் தான் பெரியபுராணம். கி.பி., 11ம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் சேக்கிழார். அவர், சோழ மன்னன் குலோத்துங்கனிடம் அமைச்சராக இருந்தார்.குன்றத்துாரில் வாழ்ந்த அவர், நாயன்மார்கள் வாழ்ந்த இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, பெரியபுராணத்தை பாடி உள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.