திருப்புத்தூர் கோயிலில் ஆக.,16ல் ஆடிப்பூரம்
ADDED :3711 days ago
திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆக.,11ல் ஆடிப்பூர விழா நடைபெறும். அன்று காலை 9 மணிக்கு ஆண்டாள் நாச்சியாருக்கு திருமஞ்சனமும், காலை 1.30 மணிக்கு உற்சவ அம்பாளுக்கு அபிஷேகமும் மாலை 5 மணிக்கு சந்தனக்காப்பும், தீபாராதனையும் இரவில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். அன்று காலை 9 மணி முதலும், மாலை 5 மணி முதலும் இரு கட்டங்களாக பள்ளி மாணவர்கள் திருப்பாவை வாசித்தல் நடைபெறும். ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.