சத்ய சாயி சேவா சமிதி சார்பில் 90 தெய்வீக திருமண விழா
திருப்பூர்:ஸ்ரீசத்ய சாயிபாபா, 90வது பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், 21ல், 90 தெய்வீக திருமணங்கள் நடைபெற உள்ளன.ஸ்ரீசத்ய சாயிபாபா, 90வது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதிகள் சார்பில், இளைஞர்கள், பொதுமக்கள் இடையேயும் தேசப்பற்று, மனித நேயம், ஒற்றுமை ஆகியவற்றை ஏற்படுத்துதல், திருப்பூர் நகரை தூய்மையாக்கும் திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சேவை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதன் ஒரு பகுதியாக, வரும், 20 மற்றும், 21ம் தேதி, 90 தெய்வீக திருமணங்கள் நடத்தப்படுகின்றன. திருப்பூர் ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடக்கும் இவ்விழாவில், 90 ஜோடிகளுக்கு, திருமணங்கள் நடத்தி வைக்கப்படும்; பங்கேற்பவர்களுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட உள்ளன என, ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதிகள் திருப்பூர் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.