உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் இ-பூஜா, இ-புக்கிங் திட்டம் செயல்படுத்த உத்தரவு!

கோவில்களில் இ-பூஜா, இ-புக்கிங் திட்டம் செயல்படுத்த உத்தரவு!

திருப்பூர்: கோவில்களில், இ-பூஜா மற்றும் இ-புக்கிங் முறையை அமல்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி அறிவுறுத்தியுள்ளார்.தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவில்கள், நிலங்கள், நிர்வாகம் தொடர்பான அனைத்து தகவல்களும், இணையதளமயமாக்கப்பட்டுள்ளன. கோவில் பூஜைக்கு இ--பூஜா வசதியும், தங்குமிடம், மண்டபம், அன்னதானம் ஆகியவற்றை பதிவு செய்ய, இ--புக்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்களில், இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை, உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து கோவில்களிலும் அமல்படுத்த வேண்டும், மாநிலத்தில் எங்கிருந்தாலும், அறநிலையத்துறை வெப்-சைட் மூலம், பதிவு செய்தல் மற்றும் தொகை செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என, அறநிலையத்துறை கமிஷனர் வீரசண்முகமணி அறிவுறுத்தியுள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், இ-பூஜா மற்றும் இ-புக்கிங் வசதியை அனைத்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான தொழில்நுட்ப வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கோவில்களில் அன்னதானம், பூஜை, தங்குமிட வசதியை எங்கிருந்தும் பதிவு செய்யலாம்; முறைகேடுகளை தவிர்க்கலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !