சுந்தரேசுவரர் கோயிலில் திருவாசக முற்றோதுதல் விழா
ADDED :3766 days ago
வடமதுரை : வடமதுரையில் 300 ஆண்டுகள் பழமையான மீனாட்சியம்மன் உடனமர் சுந்தரேசுவரர் கோயில் உள்ளது. பல ஆண்டுகளாக திருப்பணி நடைபெறாமல் பொலிவிழந்த நிலையில் உள்ளது. இதனால் கோயிலில் திருப்பணி நடைபெற வேண்டி திருவாசக முற்றோதுதல் விழா நடந்தது. பின்னர் மகேசுவர பூஜையும், எம்பிரான் சண்டேசநாயனார் ரத வீதிகள் வழியே வீதியுலா வந்தார். விழா ஏற்பாட்டினை மாவட்ட சிவனடியார்கள் திருக்கூட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.