உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை நிறைவு

திருத்தணி கோவிலில் ஆடி கிருத்திகை நிறைவு

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வந்த ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடந்த மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவில், 75 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா, கடந்த 6ம் தேதி முதல், நேற்று வரை நடந்தது. விழாவை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள், காவடிகளுடன் மலைக் கோவிலுக்கு வந்து மூலவரை வழிபட்டனர். மேலும், 8ம் தேதி, முதல் நாள் தெப்பத் திருவிழாவும், நேற்று முன்தினம் இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவும் நடந்தன. நேற்று, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா மற்றும் ஆடிக் கிருத்திகை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை 5:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சரவணப்பொய்கையில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில், எழுந்தருளி, ஏழு முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !