உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா

புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா

சின்னாளபட்டி : ஏ.வெள்ளோட்டில் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பங்கு பாதிரியார் சேசுராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. புனித சந்தியாகப்பர் சிலுவை திண்ணையின் புதிய கோபுரம் திறந்து வைக்கப்பட்டு அர்ச்சிப்பு செய்யப்பட்டது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு புனிதர்களின் சொரூபங்கள் வைக்கப்பட்ட 11 ரதங்கள் முக்கிய வீதிகளில் பவனி வந்தன. திருவிழா திருப்பூஜைகள் நடந்தன. ஊர் முக்கியஸ்தர்கள், விழா குழுவினர் திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !