உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மின்மோட்டார் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம்!

மின்மோட்டார் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம்!

மேலுார்: மேலுார் செக்கடி நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்கள் காப்பு கட்டி, 30 நாட்கள் எண்ணெய் தாளிதம் இல்லாமலும், மாமிசம் சாப்பிடாமலும் கடும் விரதமிருந்தனர். நேற்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெரிய டிரம்களில் பால் ஊற்றப்பட்டு, மின் மோட்டார் மூலம் நாகம்மாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. திருவிழாவில் திருநங்கைகளும் அலகு குத்தி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !