உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் 1001 விளக்கு பூஜை

குன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் 1001 விளக்கு பூஜை

குன்னுார் : பழைய அருவங்காடு பகுதி முத்துமாரியம்மன் கோவிலில், நாளை, 1001 விளக்கு பூஜை நடக்கிறது. குன்னுார் பழைய அருவங்காடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. 14ம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு, காலை, 6:00 மணி முதல் 10:30 மணி வரை அம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு அன்னதானம், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. மாலை, 4:00 மணிக்கு, உலக நலனுக்காக, 1001 விளக்கு பூஜை, காய்கனி பூஜை, விவசாயம் செழிக்க காய்கனி பூஜை, மாங்கல்ய பூஜை ஆகியவை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !