உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரங்கியூர் கோவிலில் தேரோட்டம்

பேரங்கியூர் கோவிலில் தேரோட்டம்

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 28ம் தேதி சாகை வார்த்தலுடன் ஆடிமாத உற்சவம் துவங்கியது. 29ம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், 4ம் தேதி கேடய உற்சவமும் நடந்தது.தொடர்ந்து 5ம் தேதி சிம்ம வாகனத்திலும், 6ம் தேதி முத்துப்பல்லக்கிலும் சாமி வீதியுலா நடந்தது. இதையடுத்து 7ம் தேதி நாகவாகனத்திலும், 8ம் தேதி அன்னவாகனத்திலும், 9ம் தேதி காமதேனு வாகனத்திலும் வீதியுலா நடந்தது.கடந்த 10ம் தேதி தெருவடைச்சான், 11ம் தேதி வெட்டுங்குதிரை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட அம்மனை 40 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்யப்பட்ட புதிய தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !