ஆடி அமாவாசை விழா: பக்தர்களுக்கு வசதிகள்
ADDED :3820 days ago
வருஷநாடு: ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரிமகாலிங்கம் மற்றும் உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில்களில் திருவிழா நடக்கிறது. இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முத்தலாம்பாறை ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் வரக்கூடிய வாகனங்ளை நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. டேங்கர் லாரி மூலமாக பக்தர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி., குலாம்ஆசாத் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் வரக்கூடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.