திண்டிவனம் கோவிலில் நாளை தீமிதி விழா
ADDED :3711 days ago
திண்டிவனம்: திண்டிவனம், தில்லையாடி வள்ளியம்மை நகரில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் 4ம் ஆண்டு, கூழ்வார்த்தல் மற்றும் தீமிதி திருவிழா நாளை நடக்கிறது.இதையொட்டி, காலை 7 மணிக்கு கெங்கையம்மனுக்கு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு சக்தி கரகமும், மதியம் 1.30 மணிக்கு கூழ்வார்த்தல் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.