ஓம் சக்தி அம்மன் ஆடிப்பூர திருவிழா!
பெங்களூரு: சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் ரோடு, ஓம் சக்தி அம்மன், 30ம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா, நாளை துவங்குகிறது.இக்கோவிலில் ஆடிப்பூர விழா, இந்த ஆண்டு, 30ம் ஆண்டு திருவிழாவாக, மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது.நாளை காலை, காப்பு கட்டிய பின், சக்தி கொடி ஏற்றப்படுகிறது. பின், ஓம் சக்தி அம்மனுக்கு, பொதுமக்கள் பாலாபிஷேகம் செய்து, பிரசாதம் வழங்கப்படுகிறது. இதையடுத்து, அமாவாசை ஹோமத்துக்கு பின், அன்ன தானம் வழங்கப்படுகிறது. வரும், 15ம் தேதி காலை, நதி தீர்த்தங்கள், ராமேஸ்வரம் கோவில் கிணற்று தீர்த்தங்களால், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றப்படுகிறது.மூன்றாம் நாளான, 16ம் தேதி பகல், ஓம் சக்தி அம்மன் வர்ணிப்புடன் கஞ்சி, கூழ் வார்த்தல், சிறப்பு பூஜை நடக்கிறது. மாலை, 501 தீச்சட்டிகள், 108 வேப்பிலை கரகங்கள், 11 பூக்கரகங்களுடன் ஓம் சக்தி, பிரத்தியங்கரா தேவி தேர்களுடன் ஊர்வலமும், இரவு, மகா மங்களாரத்தியும் காண்பிக்கப்படுகிறது.பாலாபிஷேகத்துக்கு, 15 ரூபாய், தீச்சட்டி எடுக்க, 151 ரூபாய், வேப்பிலை கரகம் எடுக்க, 650 ரூபாய், பால் குடம் எடுக்க, 501 ரூபாய் கட்டணம்.ஆடிப்பூர விழாவில் பங்கேற்று அம்மன் அருள் பெறுமாறு, கோவில் நிறுவனர், தலைவர் சக்தி சண்முகம், சக்தி சுந்தரி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.