உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

திருத்தணி:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று அம்மன் திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு, காலை 7:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.மாலை 5:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இரவு 9:00 மணிக்கு, அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !