பத்தமடை கோயிலில் 25ம் தேதி புஷ்பாஞ்சலி திருவிழா
ADDED :5299 days ago
வீரவநல்லூர் : பத்தமடை கோயிலில் வரும் 25ம் தேதி புஷ்பாஞ்சலி திருவிழா நடக்கிறது.பத்தமடை வில்வநாத சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை புஷ்பாஞ்சலி திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்று காலை வெற்றிவேலனாய் அருள்பாலிக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு விசேஷ அபிஷேகங்கள், தீபாராதனை, மாலை பெண்கள் திருவிளக்கு வழிபாடு, இரவு பலவண்ண நறுமண மலர்களால் புஷ்பாஞ்சலி நடக்கிறது.ஏற்பாடுகளை கார்த்திகை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.