வீரராகவப் பெருமாள் கோவிலில் 16ல் ஆடிப்பூரம்
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் ஏழாம் ஆண்டு ஆடிப்பூர திருவிழா, 16ல் நடக்கிறது. அன்று மாலை, 4:00 மணிக்கு, ஆண்டாள் திருமஞ்சனம், 6:00க்கு, மகா தீபாராதனை மற்றும் சுவாமிகள் வீதி உலா நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு, "ஆண்டாள் காட்டிய பக்தி நெறி என்ற தலைப்பில், தாமஸ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோரின் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.திருச்சி கண்ணன் குருக்கள் தலைமையிலான குழுவினர், சந்தனத்தில் ஆண்டாள் அலங்காரம் செய்து, பக்தர்கள் தங்கள் கைகளிலேயே மலர் சமர்ப்பணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் பெண்களுக்கு திருமாங்கல்யம், பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் தலைவர் பலராமன், உதவி தலைவர் செல்வம், செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.