நாகம்மா தேவி ஆலய 23ம் ஆண்டு உற்சவம்
பெங்களூரு:செயின்ட் ஜான்ஸ் ரோடு நாகம்மா தேவி ஆலய, 23ம் ஆண்டு சிறப்பு உற்சவம் வரும், 30ம் தேதி துவங்கி, செப்டம்பர், 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்று அம்மன் அருள் பெறுமாறு, கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவீதி உலா:இம்மாதம், 30ம் தேதி காலை, 10:00 மணியிலிருந்து, 12:00 மணி வரை கோ பூஜை, கணபதி பூஜை, கங்கா பூஜை, ஆவரண சுத்தி, ரக் ஷா பந்தன், த்வஜா ரோஹணம், பாலிகா பூஜை நடக்கிறது. மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படவுள்ளது. மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடைபெறும். அடுத்த நாள் காலை, 9:00 மணியிலிருந்து, 10:30 மணி வரை, நித்ய ஆராதனை மற்றும் கலச ஸ்தாபனம், மாலை, 6:00 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், சண்டிகா ஹோமம், நாகசகஸ்ர ஹோமம், ஹனுமன் ஹோமம் மற்றும் பரிவார ஹோமங்கள் நடக்கிறது. செப்டம்பர், 1ம் தேதி காலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை, விஜய வீராஞ்சனேய சுவாமி மஹாபிஷேகம், மங்களாரத்தி, இரவு, 7:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை விஜய வீராஞ்சநேய சுவாமி சகஸ்ரநாமம், சிவ பரிவார அஷ்டோத்ரம், வடைமாலை சேவை, வெற்றிலை மாலை சேவை நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.
தீர்த்த பிரசாதம்:செப்., 2ம் தேதி காலை, 6:00 மணியிலிருந்து 8:00 மணி வரை, சனி பகவான் மஹாபிஷேம், அலங்காரம், இரவு, 7:00 மணியிலிருந்து 9:00 மணி வரை, சனிபகவானுக்கு மந்திரபுஷ்பம் அர்ச்சனை, மங்களாரத்தி நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.செப்., 3ம் தேதி காலை, 6:00 மணியிலிருந்து, 8:00 மணி வரை நாகம்மா தேவி மஹாபிஷேகம், அலங்காரம், மஹாமங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணிக்கு நாகம்மா தேவி சகஸ்ரநாமம், மந்திர புஷ்பம் அர்ச்சனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. செப்., 4ம் தேதி காலை 10:00 மணியிலிருந்து 2:00 மணி வரை பொங்கல் சேவா, நிவேதனம் மற்றும் மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம், அன்னதானம், மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:00 மணி வரை, மாவிளக்கு சேவை (பக்தர்கள் மாவிளக்கு கொண்டு வரலாம்)பல்லக்கு செப்., 5ம் தேதி காலை 8:00 மணியிலிருந்து 12:00 மணி வரை, சனி பகவான் அலங்காரம், மங்களாரத்தி, அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரை, சனி பகவான் மந்திர புஷ்பங்கள் அர்ச்சனை தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. செப்., 6ம் தேதி காலை 10:00 மணிக்கு நாகம்மா தேவி ரதோற்சவம், சிவ பரிவாரம், சனிபகவான், இரவு 10:00 மணிக்கு ராம பரிவார விஜய ஆஞ்சநேய உற்சவ மூர்த்திகள் வீதி உலா வருகின்றனர். மஹா பல்லக்கு உற்சவம் நடக்கிறது. செப்., 8ம் தேதி இரவு 7:00 மணியிலிருந்து, 9:00 மணி வரை ஊஞ்சல் சேவை புஷ்பாஞ்சலி சேவை காப்பு கழற்றுதல், த்வாஜோ அவரோகணம் மங்களாரத்தி தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு நாகதேவியின் அருளை பெறுமாறு, ஆலய தர்மகர்த்தா கிருஷ்ணப்பா, தொண்டர்கள், பக்தர்கள் கேட்டுக் கொண்டுஉள்ளனர்.