உத்திரகோசமங்கையில் 1008 விளக்கு பூஜை!
ADDED :3795 days ago
கீழக்கரை: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத்திட்டத்தின் சார்பாக, உத்திரகோ சமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தான ராணி லட்சுமி குமரன் சேதுபதி விளக்கேற்றி துவக்கி வைத்தார். விவேகவாணி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கேந்திர செயலாளர் அய்யப்பன், பிரியா சிவக்குமார், சிவனடியார் கருணாகரசுவாமிகள், பேஷ்கார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சகோதரி நாகஜோதி, செல்வராணி ஆகியோர் செய்திருந்தனர். ஆன்மிக சொற்பொழிவு, நாடகம் நடந்தது.