உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் 200 பேர் தங்கரத நேர்த்திக்கடன்: பக்தர்கள் காத்திருப்பு!

பழநியில் 200 பேர் தங்கரத நேர்த்திக்கடன்: பக்தர்கள் காத்திருப்பு!

பழநி: பழநியில் ஆடி அமாவாசை, ஆக.15,16, ஆகிய மூன்று நாட்களில் 200 பேர் தங்கரதம் இழுத்துள்ளனர். பழநி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் மட்டுமின்றி விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆடி அமாவாசை, ஆக.,15,16விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் மலைக் கோயிலில் குவிந்தனர். இவர்கள் வின்ச், ரோப்கார் ஸ்டேஷன்களில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். ஆடிவெள்ளியன்று 75பேரும், நேற்றுமுன்தினம் 125பேரும், நேற்று 50பேர், என மொத்தம் 200 பேர் இரவு 7 மணிக்கு தங்கரதம் இழுத்தனர். மலைக்கோயிலில் பொதுதரிசன வழியில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவர் ஞானதண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !