திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்!
ADDED :3736 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர்.நேற்று சுதந்திர தினம் விடுமுறை என்பதால், பல்வேறு மாநிலத்திலிருந்து பக்தர்கள் இக் கோவிலில் குவிந்தனர்.அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டனர்.௫0 ரூபாய் கட்டண தரிசனம், தர்ம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை 3.00மணிக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. திருநள்ளார் இன்ஸ்பெக்டர் பால் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.