பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ விழா!
ADDED :3736 days ago
கடலூர்: கடலூர் குப்பன்குளம் பூஞ்சோலை மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளம் பூஞ்சோலை மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை அபிஷேகம், இரவு வீதியுலா நடந்தது. கடந்த 16ம் @ததி காலை செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.