உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்

திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்

திருப்போரூர்: திருப்போரூர் கைலாசநாதர் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் நடந்தது. திருப்போரூர், பிரணவ மலைக்குன்றில் பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது.இதையொட்டி, பக்தர்கள், காலை, 10:30 மணிக்கு, வேம்படி விநாயகர் கோவிலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, 100க்கும் மேற்பட்டோர், குடங்களில் பால் சுமந்து, கைலாசநாதர் கோவிலை அடைந்தனர். பாலாம்பிகை அம்மனுக்கு, நண்பகலில் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். கோவில் செயல் அலுவலர் நற்சோணை உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !