ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு!
ADDED :3740 days ago
சபரிமலை: ஆவணி மாத பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரு கிறது. அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. புதிய தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். 21ம்தேதி இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு ஆவணி மாத பூஜை நிறைவுபெறுகிறது. ஓணம் பண்டிகைக்காக சபரிமலையில் வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.