விருகாவூர் கோவிலில் சிவசக்தி அம்மனுக்கு வளையல்காப்பு விழா!
ADDED :3741 days ago
கள்ளக்குறிச்சி: விருகாவூர் சர்க்கரை விநாயகர் கோவிலில் சிவசக்தி அம்மனுக்கு வளையல் காப்பு நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் சர்க்கரை விநாயகர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. கோவிலில் உள்ள சர்க்கரை விநாயகருக்கு சிறப்பு பூஜையும், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவமும், சிவசக்தி அம்மனுக்கு வளையல் காப்பும், ஓம்சக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடந்தது. கோவிலில் தொடர்ந்து நடந்த ஆடிப்பூர சிறப்பு பூஜைகளில் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.