விழுப்புரம் கோவில்களில் ஆடிப் பூர வைபவம்!
விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரர் கோவிலில் ஆடிப் பூரவைபவம் நடந்தது. விழுப்புரம் கிழக்குப் பாண்டி ரோட்டிலுள்ள மகாலட்சுமி கு பேரன் கோவிலில், ஆடிப் பூர உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரம் நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு தாயார் சன்னதி புறப்பாடு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதில் சுமங்கலிகளுக்கு, மங்கல பொரு ட்கள் வழங்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் நடராஜர் தெரு அங்காளபரமேஸ்வரி கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் செய்திருந்தனர். விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தை யெ õட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. பெருந்தேவிக்கும் ,பெருமாள்ளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி வெங்கடேஷ்பாபு பட்டாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் செய்தி ருந்தனர்.