அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4034 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம், அவலூர்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் அறக்கட்டளை தலைவர் சின்னராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.