திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :3743 days ago
திருமலைக்கேணி : திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், சந்தனம், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங் கள் செய்யப்பட்டன. எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன், கோவில்பட்டி கைலாசநாதர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.