ராமானுஜ பஜனை மடத்தில் திருவிளக்கு பூஜை!
ADDED :3744 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், ஆண்டாள் அவதார தினத்தையொட்டி, திரு விளக்கு பூஜை நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் காலை 7.00 மணிக்கு, கலச ஸ்தபானம், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6.05 மணிக்கு விளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை பஜனை மடம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.