நயினார் கோவில் நாகநாத சுவாமி கோயிலில் திருக்கல்யாண விழா!
பரமக்குடி: பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில், ஆடி திருக்கல்யாண விழா நடந்தது. இக்கோயிலில் கடந்த ஆக.,7 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெள்ளிப் பல்லக்கு, அன்னம்,சிம்மன், கமலம், ரிஷபம், கிளி, குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார். ஆக., 15 ல் நான்கு ரதவீதிகளில் தேரோட்டமும், ஆக., 17ல் அம்மன் தபசு காட்சியும், சுவாமி,அம்மன் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை 10.30 க்கு சவுந்தர்யநாயகி அம்மனுக்கும், நாகநாதசுவாமிக்கும் திருக்கல்ய õணம் நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, தாலியை புதுப்பித்து அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. இரவு சுவாமி மின்சார தீப ரதத்திலும், அம்மன் தென்னங்குருத்து சப்பரத்திலும் வீதிவலம் வந்தனர். விழாவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக பொறுப்பாளர் பாண்டியன் உட்பட நுõற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.