உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ஆவணிமாத சிறப்பு பூஜை

வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ஆவணிமாத சிறப்பு பூஜை

வால்பாறை: ஆவணி மாதம் முதல் நாளான நேற்று, வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர் சன்னதி உள்ளது. இதைச்சுற்றி விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சன்னதியில் இடது புறம் துர்க்கை அம்மனுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடக்கிறது.ஆவணி மாதம் முதல் நாளான நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாசாணியம்மன் கோவிலுக்குரூ.1.39 லட்சம் காணிக்கை

ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு நடந்த உண்டியல் எண்ணிக்கையில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துவதும் வழக்கம். இந்நிலையில், ஆடிமாதம் அமாவாசையை முன்னிட்டு கோவில் வளாகத்தில், 5 உண்டியல் வைக்கப்பட்டு இருந்தன. அவை நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கையாக, ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 17 ரூபாய் வசூலாகியுள்ளது. இந்து சமய அறநிலைத்துறையின் பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி, மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் கார்த்திக் முன்னிலையில் இப்பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !