ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை பிரதிஷ்டை!
ADDED :3745 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் சுவாமி விவேகானந்தர் சிலை கடந்த 2013ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வந்தன. சிலை அமைத்து 3ம் ஆண்டின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. சுவாமி விவேகானந்தர் சிலைக்கு, ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா சிறப்பு பூஜைகள், தீபாராதனை செய்தார். நிகழ்ச்சியில் சாரதா ஆசிரம சகோதரிகள், மாணவர்கள், ஆசிரிய மாணவர்கள் கலந்து கொண்டு, 15 லட்சம் விவேகானந்தரின் மந்திரங்களை முழங்கின.