பொன்னியம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
ADDED :3717 days ago
ஆர்.கே.பேட்டை: பொன்னியம்மன் கோவி லில், ஆடித்திருவிழாவை ஒட்டி, 108 பால்குட ஊர்வலம், நேற்று நடந்தது. ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்திரவிலாசபுரம் ஏரிக்கரையோரம், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடித்திருவிழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு, 108 பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மாலை, கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.