சொக்கநாதர் கோயில் ஆவணி விழா துவக்கம்: ஆக.,27ல் தேரோட்டம்!
ADDED :3817 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாத சுவாமி கோயில் ஆவணி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு கொடிப்பட்டம் சுற்றி வரப்பட்டு கொடிமரத்தில் ஏற்ற சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சொக்கநாதர், மீனாட்சி, பிரியாவிடை சுவாமி மண்டபத்தில் எழுந்தருளினர். தக்கார் தேவராஜ், நிர்வாக அதிகாரி சுவர்ணாம்பாள், பிரமோற்சவ கட்டளை நிர்வாக அறங்காவலர் ரமேஷ்குமார் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 26ல் திருக்கல்யாணம், 27ம் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.