முத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்!
ADDED :3715 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் அமைந்துள்ள முத்து மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, செல்லியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகி வீதியுலா சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் சாகை வார்த்தலும், காத்தவராயனுக்கு கும்பம் படைத்தலும் தீபாராதனையும் நடந்தது. இரவு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.