உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்!

மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்!

வாலாஜாபாத்: படுநெல்லி காலனி மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம், ஆடி திருவிழா கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த படுநெல்லி காலனியில், மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தின் இறுதி வாரத்தில், ஆடி திருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு ஆடி திருவிழாவில், கடந்த 16ம் தேதி, மாலை 5:00 மணியளவில், கிராம தேவதை பொன்னியம்மனுக்கு, கிராமவாசிகள் பொங்கலிட்டனர்.  அன்று இரவு, கரகம், மலர் அலங்காரத்தில், வீதியுலா வந்தது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம், காலை 8:00 மணியளவில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்; பிற்பகல் 1:00 மணியளவில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும்; இரவு 9:30 மணியளவில்,  மாரியம்மன், பொன்னியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, பத்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன்களை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !